×

சூறையாடிய ‘கஜா’ புயல் மீளமுடியாத அளவுக்கு மின்துறையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சேத மதிப்பு: மின்விநியோகத்தை சீரமைக்க 16,932 ஊழியர்கள்

சென்னை: தமிழகத்தில் ‘கஜா’ புயல் காரணமாக மின்துறையில் நாளுக்கு நாள் சேதத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருப்பதாக தினமும் நடந்து வரும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:‘கஜா’ புயலின் காரணமாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,  கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் சில மாவட்டங்களில் மின் வழிதடங்கள்,   மின் கம்பங்கள், மின் மாற்றிகள், துணை மின்  நிலையங்கள் ஆகியவை  சேதமடைந்துள்ளன.  இன்று (நேற்று) காலை 8 மணி நிலவரப்படி சேதம் மற்றும் சேதங்களின் மதிப்பு அதிகரித்துள்ளது.40 ஆயிரம் மின்கம்பங்கள்உயரழுத்த மின் கம்பங்கள் நாகப்பட்டினத்தில் 3000, புதுக்கோட்டையில் 5000, தஞ்சாவூரில் 2,400,  திருவாரூரில் 1670, திண்டுக்கலில் 1067, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் 361,  கடலூரில் 66 மற்ற  மாவட்டங்களில் 643 மொத்தம் 14,207 கம்பங்களும், தாழ்வழுத்த மின் கம்பங்கள் நாகப்பட்டினத்தில் 7000, புதுக்கோட்டையில் 4000, தஞ்சாவூரில் 2600,  திருவாரூரில் 5680, திண்டுக்கல்லில் 3000, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும்  தேனி மாவட்டங்களில் 1273, கடலூரில் 354, மற்ற மாவட்டங்களில் 1824, மொத்தம் 25731, ஆக மொத்தம் 39938 கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

347 டிரான்ஸ்பார்மர் அவுட்மின்மாற்றிகளை பொறுத்தவரை நாகப்பட்டினத்தில் 33, புதுக்கோட்டையில் 51, தஞ்சாவூரில் 28,  திருவாரூரில் 170, திண்டுக்கல்லில் 40, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் 4,  கடலூரில் 9, பிற  மாவட்டங்களில் 12 மொத்தம் 347 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன.இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த, 8216 மின் பணியாளர்களும் பிற மாவட்டங்களிலிருந்து அனுப்பப்பட்டுள்ள, 4316 மின் பணியாளர்களும் மொத்தம் 12532 பணியாளர்களும் மற்றும்  அதிகாரிகளும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (நேற்று முன்தினம்) வரை பிற மாவட்டங்களிலிருந்து, 3400 பணியாளர்கள் சிறப்பு பணியாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று கூடுதலாக 1000 பணியாளர்கள்  மற்றும் அலுவலர்கள் பிற மாவட்டங்களிலிருந்து சிறப்பு பணியாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை,  தஞ்சாவூர்,  திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மின்சாரம், மதுவிலக்கு  மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் வேலுமணி, உணவுத் துறை  அமைச்சர் காமராஜ், வேளாண்மைத்துறை அமைச்சர்  துரைகண்ணு ஆகியோர் தாஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களையும் அங்கு நடைபெறும் மீட்பு பணிகளையும் நிவாரண முகாம்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் விக்ரம் கபூர், எரிசக்தித் துறை செயலர் முகமது நசிமுதின், இணை மேலாண்மை இயக்குநர் தர், மின் தொடரமைப்பு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சண்முகம்  ஆகியோர் புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முகாமிட்டு மின் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து கண்காணித்து வருகின்றனர்.

3500 கி.மீட்டர் அளவுக்கு மின்கம்பிகள் துண்டிப்பு
உயரழுத்த மின் கம்பிகள் நாகப்பட்டினத்தில் 60 கி.மீ., புதுக்கோட்டையில் 30கி.மீ., தஞ்சாவூரில் 80கி.மீ., திருவாரூரில் 598கி.மீ., திண்டுக்கல்லில் 26கி.மீ., ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில், 44 கி.மீ., கடலூரில்  6 கி,மீ., பிற மாவட்டங்களில், 108கி.மீ., என மொத்தம் 952 கிலோ மீட்டர் அளவிலும், தாழ்வழுத்த மின் கம்பிகள் நாகப்பட்டினத்தில் 230 கி.மீ., புதுக்கோட்டையில் 35கி.மீ., தஞ்சாவூரில் 120கிமீ, திருவாரூரில் 1685 கி.மீ,  திண்டுக்கல்லில் 63 கி.மீ. ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் 120 கி.மீ., கடலூரில் 36கி.மீ. பிற மாவட்டங்களில் 318 கி.மீ. மொத்தம்   2607 கிலோ மீட்டர் அளவிலும் ஆக மொத்தம், 3559 கிலோ மீட்டர்  அளவில் மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kaja ,storm , 'kaja' , Increasing damage ,employees ,rectify electricity
× RELATED கடன் பிரச்னை காரணமாக டிராவல்ஸ் அதிபர் தூக்கிட்டு தற்கொலை