கஜா புயலினால் அதிகம் பாதிக்கப்பட்ட 4 பகுதிகளில் மதுக்கடைகள் மூட உத்தரவு: மேலாண் இயக்குநர் கிர்லோஷ்குமார்

சென்னை: தமிழகத்தில் கஜா புயலினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் கிர்லோஷ்குமார் வழங்கினார். சமீபத்தில் டெல்டா பகுதிகளை தாக்கிய கஜா புயலின் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

மீட்பு பணிகள் நடைபெற்று வரும் வேலையில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சத்திலேய இந்த மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட உத்தரவு விடப்பட்டுள்ளதாக தாகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுக்கடைகள் 1-மணிக்கு முன்பாகவே மூடப்பட்டது. புதுக்கோட்டையில் மதுக்கடைகளை மூடுவதற்கு மக்கள் மகிழ்ச்சி அளித்துள்ளனர். புதுக்கோட்டையில் மட்டும் 191 மதுக்கடைகள் உள்ளன. அதேபோல தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 600க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை மூடுவதற்காக உததரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த 4 மாவட்டங்களிலும் மதியம் 1 மணிக்கு முன்பாகவே மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அந்த மதுக்கடைகளை திறக்க கூடாது என்று தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் கிர்லோஷ்குமார் உத்தவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>