×

அமெரிக்காவில் எச்4 விசாதாரர்களின் வேலை பறிக்கும் திட்டம் டிரம்ப் நடவடிக்கையை தடுக்க புதிய மசோதா

வாஷிங்டன்: இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணிபுரிய எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதன் உதவியால் ஏராளமான இந்தியர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். குறிப்பாக, தொழில்நுட்ப பணியாளர்கள் அதிகளவில் இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்த விசா வைத்துள்ளவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு எச்4 விசா வழங்கப்படுகிறது. இதை கொண்டு அவர்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை பெற முடியும். ஒபாமா ஆட்சிக்காலத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை ரத்து செய்ய தற்போதைய அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இந்தாண்டு இறுதியில் அதற்கான சட்டத்தை அவர் கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.
 
இந்நிலையில். ஒபாமா அரசின் சட்டத்தை ரத்து செய்வதில் இருந்து டிரம்ப்பை தடுக்கும் வகையில், ‘எச்4 வேலைவாய்ப்பு பாதுகாப்பு மசோதா’ என்ற மசோதாவை குடியரசு கட்சியை சேர்ந்த 2 எம்பி.க்கள் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர். அன்னா எஸ்ஷோ,  ஜோயி லோப் கிரன் என்ற அந்த எம்பி.க்கள் மசோதாவை தாக்கல் செய்து பேசுகையில், ‘‘எச்4 விசாதாரர்களின் வேலையை பாதுகாப்பதே இந்த மசோதாவின் நோக்கம். இதன்மூலம், அவர்களின் பொருளாதாரம், குடும்ப ஒற்றுமை பாதுகாக்கப்படும். எச்4 விசாதாரர்களின் வேலையை பறித்தால், அமெரிக்காவில் குடியேறியுள்ள பலரது குடும்பம் பிரிந்துவிடும் அல்லது பலர் சொந்த நாட்டுக்கு திரும்பும் நிலை ஏற்படும். அப்போது, அவர்களின் திறமையை அமெரிக்காவிற்கு எதிரான நாடுகள் பயன்படுத்தி கொள்வதால் நமக்கு பாதிப்பு ஏற்படும்’’ என எச்சரித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : H4 ,United States , United States, H4 Visa, Trump, Bill
× RELATED அமெரிக்காவில் நடைபெற்ற மெட் காலா பேஷன் ஷோ 2024..!!