×

தமிழகத்தை நிலைகுலைய செய்த நிஷா, ஜல், தானே, நீலம், வர்தா, ஓகி, கஜா புயல்கள்

சென்னை: கடந்த 13 ஆண்டுகளில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டத்தை நிலைகுலைய செய்த புயல்கள் விபரங்கள் மற்றும் கஜா என்று புயலுக்கு இலங்கை விஞ்ஞானிகள் பெயர் வைத்த பின்னணி தகவல்கள் வெளியாகி  உள்ளன. இந்தியா உள்பட சார்க் அமைப்பில் உள்ள நாடுகளை தாக்கும் புயல்களுக்கு ஒவ்வொரு நாடும் பெயர் வைக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. தற்போது வைக்கப்பட்டுள்ள ‘கஜா’ எனும் பெயர் இலங்கை நாடு  வழங்கிய பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து தாய்லாந்து நாடு பெயர் வைக்க உள்ளது. அந்நாடு ‘பேத்தை’ என்ற பெயர் சூட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை  கஜா புயல் கைவிட்டாலும், நிச்சயம்  பேத்தை புயல் உருவானால் சென்னைக்கு மழை கைகொடுக்கும் என்றே நம்பப்படுகிறது.

கடந்த 13 ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்களின் தாக்கம் வருமாறு:
* கடந்த 2005ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வங்கக் கடலில் பியார், பாஸ், பர்னூஸ் என 3 புயல்கள் அடுத்தடுத்து உருவாகின. டிசம்பர் முதல் வாரத்தில் உருவான பர்னூஸ் புயல் வேதாரண்யம் அருகே கரையை  கடந்தது. புயலால், 25 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு இருந்தாலும், கடுமையான பயிர் சேதம் ஏற்பட்டது. குறிப்பாக, கடலூர், சிதம்பரம் பகுதிமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

* கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி இலங்கையில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிஷா புயலாக உருவெடுத்தது. தமிழகத்தை தாக்கிய இந்த புயலால் தஞ்சாவூர் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். கடந்த 22  ஆண்டுகளுக்குப் பின்னர் உருவான மிகப்பெரிய புயலான நிஷாவால் 150 பேர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கான கால்நடைகளும் பலியாயின.

* கடந்த 2010ம் ஆண்டு தென் சீனக் கடலில் உருவான ஜல் புயல், நவம்பர் 6ம் தேதி 111 கிமீ வேகத்தில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே கரையை கடந்தது. இந்த புயலால் 50க்கும் அதிகமான மக்கள் பலியாகினர்.
* கடந்த 2011ம் ஆண்டு இந்திய பெருங்கடலில் உருவான தானே புயல், டிசம்பர் இறுதியில் கடலூர் அருகே கரையை கடந்தது. கடலூர் மாவட்டத்தை இந்த புயல் புரட்டிப்போட்டது. இந்த புயலால் 40க்கும் மேற்பட்டோர்  பலியாகினர்.

* கடந்த 2012ம் ஆண்டு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையமாக உருவாகி, அக்டோபர் 31ம் தேதி நீலம் என்ற புயல் மகாபலிபுரம் அருகே கரையை கடந்தது. சென்னைக்குள் கடல் நீர் புகுந்ததால், பள்ளி, கல்லூரிகள் நிவாரண  முகாம்களாக மாற்றப்பட்டன. பலத்த காற்று வீசிய நிலையில், பிரதிபா காவேரி என்ற கப்பல் பட்டினப்பாக்கம் அருகே தரைதட்டியது. இந்த கப்பலில் இருந்து குதித்த பணியாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.

* கடந்த 2015ம் ஆண்டு தமிழகத்தை, வர்தா புயல் தாக்கியது. டிசம்பர் 12ம் தேதி சென்னையில் கரையை கடந்த வர்தா புயலால், சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
* கடந்த 2017ம் ஆண்டு வடக்கு இந்திய பெருங்கடலில் இலங்கைக்கு அருகே உருவான ஓகி புயல், நவம்பர் 30ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. 27 பேர் உயிரிழந்த நிலையில், 170க்கும்  அதிகமானோர் காணாமல் போயினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nisha ,Jal ,Neelam ,Thane ,Varda ,Ghazi Storms ,Oki , Tamilnadu, Nisha, Jal, Thane, Neelam, Varda, Oki, Ghazi Storms
× RELATED ஜல் ஜீவன் சக்தி அபியான் திட்டத்தில்...