×

பழ.நெடுமாறன் புத்தகம் அழிப்பு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: முத்தரசன் கோரிக்கை

சென்னை: பழ.நெடுமாறன் புத்தகம் அழிக்க வேண்டும் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  அறிக்கை:‘தமிழீழம் பிறக்கிறது’ என்ற பழ.நெடுமாறனின் நூலை அழிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைக் கண்டு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதிர்ச்சியடைந்தது.‘தமிழீழம்’ என்ற கொள்கை  நிலையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கவில்லை; ஏற்கவில்லை. ஆனால், அந்தக் கருத்துள்ளவர்கள், தங்கள் நிலையை மக்களின் சிந்தனைக்கு வைப்பதற்குரிய, மறுக்க முடியாத உரிமை ஜனநாயக அரசியல் அமைப்பின்  சாரமாக இருந்து வருகிறது.

எனவே, அத்தகைய ஜனநாயக உரிமையை, சிந்தித்து கருத்துக்களை வெளிப்படுத்துகிற உரிமையை மறுப்பது ஜனநாயக அடிப்படைகளை நிராகரிப்பதாகும். சென்னை உயர்நீதிமன்றமே ‘கருத்துக்களை’ அழிக்க வேண்டும் என்ற  தீர்ப்பை வழங்கியிருப்பது. அரசியல் சாசன உள்ளடக்கத்தை காப்பாற்றுகிற அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிவிட்டது. இத்தகைய தீர்ப்பை உயர்நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து, பழ.நெடுமாறன் படைப்பு நூலை  முழுமையாக அவருக்கு திரும்ப வழங்க வேண்டும் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nedumaran ,Muthrasan , Nedumaran, book, muthurasan, request
× RELATED இலங்கை நாடாளுமன்ற முன்னாள் எம்.பி....