×

புயல் பாதித்த பகுதிகளை திருநாவுக்கரசர் பார்வை

சென்னை: புயல் பாதித்த பகுதிகளில் இன்றும், நாளையும் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பார்வையிடுகிறார். தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்ட அறிக்கை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். அதன்படி, அவர் இன்று கீரனூர், புதுக்கோட்ைட, ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, சேதுபாவாசத்திரம், பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராமப்பட்டினம், முத்துப்பேட்டை, வேதாரண்யம் பகுதியில் பார்வையிடுகிறார். நாளை (19ம் தேதி) வேளாங்கண்ணி, நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய பகுதிகளில் பார்வையிடுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thirunavukkarar ,storm , Thirunavukkarar,storm
× RELATED பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்