×

டாஸ்மாக் கடை, பார்களை 21ம் தேதி மூட வேண்டும்: கலெக்டர் உத்தரவு

சென்னை: மிலாடின் நபி தினத்தை முன்னிட்டு வரும் 21ம் தேதி சென்னையில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பார்களை மூட வேண்டும் என சென்னை கலெக்டர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட உத்தரவு: வருகின்ற 21ம் தேதி(புதன்கிழமை) மிலாடின் நபி தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு மதுபானம்(சில்லறை விற்பனை) மற்றும் தமிழ்நாடு மதுபானம்(உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், எப்.எல்.2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3(AA) உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபான விதி முறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Taskmill ,shop ,closing ,Collector , Taskmah Shop, Bars
× RELATED லாரி மீது இருசக்கர வாகனம் மோதி ஜூஸ் கடை ஊழியர் பலி