×

எந்த நிவாரணமும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை நாகையில் மு.க.ஸ்டாலினிடம் பெண்கள் கதறல்

வேதாரண்யம்: புயலால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசின் எந்த நிவாரணமும் இதுவரை கிடைக்கவில்லை என நாகையில் மு.க.ஸ்டாலினி டம் பெண்கள் கதறியபடி தெரிவித்தனர். கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று நாகை சென்றார். முதலில் தரங்கம்பாடி கடற்கரையில் புயலால் சேதமான படகுகளை பார்வையிட்டார். பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு புடவை, வேட்டி வழங்கினார். அப்போது, பெண்கள் கதறி அழுதபடி குறைகளை எடுத்து கூறினர். அவர்கள் கூறும்போது, `எங்களுக்கு அரசிடம் இருந்து எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. எங்களின் ஒட்டுமொத்த கோரிக்கை தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்பதே. எங்களிடம் ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் மீன்பிடி துறைமுகம் அமைக்காமல் ஏமாற்றுகிறார்கள். தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் அமைய நீங்கள் உதவ வேண்டும்’ என்று கூறினர்.

இதற்கு மு.க.ஸ்டாலின், `தி.மு.க. ஆட்சிக்கு வரும். அப்பொழுது மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்’ என்று ஆறுதல் கூறினார். அதைத்தொடர்ந்து, வேதாரண்யம் காந்தி நகர் அரசு உயர்நிலைப்பள்ளி முகாமுக்கு சென்றார். அங்கிருந்த பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருட்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின், நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:தமிழக அரசு நிவாரண நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கையாக செய்துள்ளதை நான் நேற்று (நேற்று முன்தினம்) பாராட்டினேன். அதே நேரத்தில் குறைகள் இருந்தாலும் தி.மு.க. சுட்டி காண்பிக்கும். இன்று (நேற்று) வேதாரண்யம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டேன். இப்பகுதியில் சரியாக நிவாரணம் வழங்கப்படவில்லை என்று ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. இவர்களிடம் நான் நேரில் சென்று விசாரித்தபோது, புயல் அடித்து ஓய்ந்த பின் அதிகாரிகளும், அமைச்சர்களும் வரவில்லை என குறை கூறினார்கள்.

ஒரு அரசு காரில் வந்த எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் இந்த பகுதியில் புயல் பாதிப்பு இல்லை என்று பேட்டி அளித்தார். அந்த பகுதிக்கு சென்ற அமைச்சரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அவர் காரை நிறுத்திவிட்டு, மதில் ஏறி குதித்து ஓடிவிட்டார். புயலால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழக அரசு 10 லட்சம் அறிவித்துள்ளது. இது போதாது. 25 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க வேண்டும். நாகை மாவட்டத்தில் அதிகமாக பாதிப்பு உள்ளது. இதை நீங்கள் ஊடகங்களில் வெளிப்படுத்தி அரசிடம் கூடுதல் நிதி பெற்று வழங்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.இதையடுத்து, பட்டுக்கோட்டையில் புயலால் வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாயினர். அவர்களின் குடும்பத்தினரை ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Women ,MK Stalin ,Nagam , Nagai, MK Stalin, Women
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...