கோடியக்கரை சரணாலயத்தில் நூற்றுக்கணக்கில் மான்கள் பலி

காரைக்கால்: நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் கஜா புயலால் சின்னாபின்னமாகி உள்ளது.  கோடியக்கரையில் உள்ள வன விலங்கு சரணாலயத்தில் 2000க்கும் மேற்பட்ட மான்கள், பன்றிகள், குதிரைகள் இருந்தன. நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 50க்கும் மேற்பட்ட மான்கள் ஆங்காங்கே இறந்து கிடந்தன. இந்நிலையில் நேற்று காரைக்கால் அருகே மேலவாஞ்சூரில் சரக்கு கப்பல் தரை தட்டி இருந்தது. அந்த இடத்தில் இன்று காலை 22 மான்கள், 7 பன்றிகள், 1 குதிரை ஆகிய விலங்குகளின் சடலங்கள் கரை ஒதுங்கின. அதேபோல் அருகே உள்ள கற்களாச்சேரி கடற்கரையில் 15 மான்கள், 20 பன்றிகள், 4 குதிரைகள் மற்றும் ஏராளமான பறவைகள் இறந்து கரை ஒதுங்கின.

புயலின் கோரத்தாண்டவத்தால் கோடியக்கரை சரணாலயத்தில் திடீர் திடீரென மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அச்சமடைந்த மான்கள் உள்ளிட்ட விலங்குகள் சிதறி ஓடி கடலில் விழுந்து இறந்திருக்கலாம். இவை தான் கரை ஒதுங்கி இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். கோடியக்கரை சரணாலயத்தில் நூற்றுக்கணக்கான மான்கள் மற்றும் பிற விலங்குகள் பலியாகி இருக்கலாம். இவை பற்றி உடனே கணக்கெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: