×

கார்த்திகை முதல்நாளில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

நெல்லை: கார்த்திகை மாதப்பிறப்பை முன்னிட்டு அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம்  தொடங்கினர். மண்டல கால பூஜை மற்றும் தை மாதம் முதல் நாளில் மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். இடையில் செல்பவர்களும் கார்த்திகையில் விரதத்தை தொடங்குவர். இந்நிலையில் மண்டல பூஜைகளுக்காக சபரிமலையில் நேற்று மாலை 4.55 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தென்மாநிலங்களில் உள்ள ஏராளமான அய்யப்ப பக்தர்கள் இன்று விரதத்தை தொடங்கினர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலும் அய்யப்ப பக்தர்கள் இன்று அதிகாலையிலேயே தாமிரபரணி, குற்றாலம், பாபநாசம், திருச்செந்தூர் போன்ற புனித நீர் நிலைகளில் நீராடி அருகே உள்ள கோயில்களில் குருசாமி முன்னிலையில் குழுவினராக மாலை அணிந்தனர்.

நெல்லை சந்திப்பு சாலைக்குமரன் கோயில், குறுக்குத்துறை சுப்பிரமணியசாமி கோயில், வண்ணார்பேட்டை குட்டத்துறை முருகன் கோயில், பாளை சிவன்கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் திரளான அய்யப்ப பக்தர்கள் அதிகாலையிலேயே நீராடி மாலை அணிந்தனர். இதுபோல் களக்காடு ஆற்றாங்கரை தெருவில் உள்ள ஐயப்பன் கோவிலில் இன்று  அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் திரளான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர். கோயில் பட்டர் பக்தர்களுக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து 6 மணிக்கு விஸ்வரூபதரிசனம் இடம்பெற்றது. காலை 7.30 மணிக்கு உஸபூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு 7.30 மணிக்கு அபிஷேகமும்  இரவு 8 மணிக்கு ஐயப்பனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடத்தப்படுகிறது. இரவு 9 மணிக்கு அத்தழபூஜையும் நடக்கிறது. 41ம் நாளான டிச 27ல் மண்டல பூஜை நடக்கிறது. வரும் டிச 11ல் வருஷாபிஷேக விழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை களந்தை சபரிமலை அய்யப்பன் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். தொடர்ந்து சரணகோஷங்கள் முழங்க சிறப்பு வழிபாடு நடத்தினர். பக்தர்கள் வசதிக்காக கனகமணி மாலை, துளசிமணி மாலை, மற்றும் வேஷ்டி, துண்டுகள் கோயில்கள் அருகே உள்ள கடைகளில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களை தரிசனத்திற்கு அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சர்ச்சை நீடிக்கிறது. சுமார் ஆயிரம் இளம்பெண்கள் அய்யப்பனை தரிசிக்க ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். பெண்கள் தரிசனத்திற்கு ஒரு தரப்பு அய்யப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மண்டல கால பூஜை நேரத்தில் சபரிமலையில் பதற்றம் தவிர்க்க சபரிமலை மற்றும் சுற்றப்பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : devotees ,Ayyappa ,Karthikeya , Karthikai, Ayyappa devotees, fasting
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்