மாலத்தீவு புதிய அதிபர் பதவியேற்பு விழா: பிரதமர் மோடி நேரில் பங்கேற்று வாழ்த்து

மாலே: மாலத்தீவு புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார். மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து புதிய அதிபராக அவர் பதவி ஏற்றுக் கொண்டார். இதற்காக தலைநகர் மாலேவில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியா - மாலத்தீவுகள் இடையிலான உறவை வலுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோடி தெரிவித்தார். பிரதமராக பதவி ஏற்றப்பின் மோடி, மாலத்தீவுகளுக்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மாலத்தீவு புதிய அதிபர் இப்ராகிம் முகமது சாலிக் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ராஜஸ்தானில் கதாகாலேட்சேபம்...