×

திருச்சி மாவட்டத்தில் கஜா தாக்குதல்: சீரமைப்பு பணிகள் விரைவுபடுத்தப்படுமா?

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை விரைவில் சீர் செய்வது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று மாலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜாமணி முன்னிலையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசுமுதன்மை செயலருமான பணீந்திரரெட்டி தலைமை வகித்தார். ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் அரசு முதன்மை செயலர் பணீந்திரரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களின் விவரம் குறித்தும், சீரமைக்கப்படும் பணிகள் குறித்தும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.  கஜா புயலால் மருங்காபுரி, மணப்பாறை, துவரங்குறிச்சி ஆகிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளதாகவும், 1,500 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாகவும், இதில் மணப்பாறை பகுதியில் மட்டும் 800 மின்கம்பங்களும், மணிகண்டம் பகுதியில் 300 மின்கம்பங்களும், இதர பகுதிகளில் 400 மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளதாக மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.

மணப்பாறை பகுதியில் மின்கம்பங்களை சீர்செய்வதற்கு ஏற்கனவே 500 மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. தற்போது 600 மின்கம்பங்கள் திருச்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மணப்பாறை, மேட்டுப்பட்டி, ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மின்கம்பங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். தோட்டக்கலைத்துறையில் அந்தநல்லூர், லால்குடி, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் வாழை சாகுபடி செய்யப்பட்ட 1,228 ஏக்கர் சேதமடைந்தாக தோட்ட க்கலைத்துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் 9பசுமாடுகள், 1 காளை, 5வெள்ளாடுகள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இவற்றை கால்நடைத்துறை மூலம் உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாநகராட்சி பகுதியில் 70 மரங்கள் விழுந்துள்ளதாகவும் இவற்றினை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. 6 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாகவும் தெரி வித்துள்ளனர். இவ்வாறு பணீந்திரரெட்டி கூறினார்.கஜா தாக்குதல் சீரமைப்பு பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Qazi Attack , Gaja Storm, Trichy, renovation works
× RELATED நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல்...