×

அதிகாரிகள் மட்டத்தில் ஆட்டம் காணும் பிளிப்கார்ட்

பெங்களூர்: பிளிப்கார்ட்டை எப்போது வால்மார்ட் வாங்கியதோ அப்போதில் இருந்தே அடுத்தடுத்து அதிகாரிகள் மட்டத்தில் ஆட்டம் காணத்துவங்கி விட்டது.  பிளிப்கார்ட் துவங்க முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான பின்னி பன்சால், பாலியல் குற்றச்சாட்டு காரணமாக விலக நேர்ந்தது. எப்போதோ நடந்த ‘பரஸ்பரம் ஒத்துக்கொள்ளப்பட்ட’ விவகாரத்தை தோண்டி எடுத்து பிரச்னையாக்கியதை அடுத்து அவர் தார்மீக அடிப்படையில் விலகினார்.  அவர் இடத்துக்கு சிக்கல் நேர்ந்த நிலையில், ஏற்கனவே 18 மாதமாக காலியாக இருந்த மனிதவள மேம்பாட்டு தலைமை பதவிக்கு இப்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார் ஸ்மிருதி சிங்.  இந்த பதவியில் இருந்த சிஓஓ நிதின் சேத் கடந்த ஆண்டு மே மாதம் திடீரென விலகினார். அவர் விலகிய பின்னர், மனிதவள தலைமை பதவியை கூடுதல் பொறுப்பாக சிஇஓ கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கவனித்து வந்தார்.

இந்நிலையில் ஸ்மிருதி சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆரம்பத்தில் ஜெராக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அதன்பின் படிப்படியாக உயர்ந்து சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தில் மனிதவள துணை தலைவராக இருந்தார்.  பின்னி பன்சால் விலகலை அடுத்து பலரும் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், ஊழியர்கள் எண்ணிக்கையை பலப்படுத்தி, நிறுவனத்தின் பெயரை நிலை நிறுத்த சில நடவடிக்கைகளை எடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக தான் ஸ்மிருதி சிங்கை நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Flipkart , Flipkart w
× RELATED ஐ போன் ஆர்டர் ரத்தால் மன உளைச்சல்...