×

இந்தியா- சீனா இடையிலான ராணுவ உறவை மேம்படுத்த வேண்டும்

பீஜிங் : இந்தியா-சீனா தங்கள் ராணுவ உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று சீன பாதுகாப்பு துறை அமைச்சர் ஜென் வெய் பெங்கே தெரிவித்துள்ளார். இந்தியா -சீனா இடையே 9வது ஆண்டு ராணுவ மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் அளவிலான கூட்டம் கடந்த 13ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை செயலாளர் சஞ்சய் மித்ரா தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் குழு கலந்து கொண்டது. சீன பாதுகாப்பு துறை அமைச்சர் ஜென் வெய் பெங்கேவை, சஞ்சய் மித்ரா நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

அப்போது, “ சீனாவும் இந்தியாவும் தங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை காட்டிலும் பொதுவான நலன்களை பற்றியே அதிகம் சிந்திக்கின்றன. இருநாடுகளுக்கும் இடையே ராணுவ உறவை மேம்படுத்த வேண்டும். ராணுவத்தில் பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். எந்தவித ஏற்றத்தாழ்வையும் சரியாக கட்டுப்பபடுத்த வேண்டும்”  என்று வென் வெய் தெரிவித்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்திய தூதர் கவுதம் பாம்பவாலே கூறுகையில், ‘‘கடந்த ஏப்ரலில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின் பிங்கும் யுஹான் நகரில் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின் மூலம் இருநாட்டுக்கும் இடையே இருந்த பல்வேறு கரு்த்து வேறுபாடுகள், தவறான கருத்துகள் அகற்றப்பட்டன” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : China ,India , Need to improve,military relationship ,India and China
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...