×

அரசு ரகசியங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் மீது அமெரிக்கா வழக்கு பதிவு

வாஷிங்டன்  அமெரிக்க அரசின் மிக முக்கிய நிர்வாக மற்றும் ராணுவ ரகசியங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் கடந்த 2010ம் ஆண்டு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ரகசியங்களை வெளியிட்டதாக கூறி, அசாஞ்சேவை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. இதனால், கைது நடவடிக்கைக்கு பயந்து, அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் அசாஞ்சே தஞ்மடைந்தார்.

இந்நிலையில், விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில், ‘விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு சம்மந்தமே இல்லாத வழக்கில் அவரது  பெயரை அமெரிக்க நீதித்துறை சேர்த்துள்ளது’ என கூறப்பட்டுள்ளது.  அசாஞ்சே மீது எந்த மாதிரியான குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : US ,founder ,WikiLeaks , U.S. prepares, criminal case ,Wikileaks' Assange
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்