×

4 வீரர்கள் அரை சதம் விளாசல் இந்தியா ஏ ரன் குவிப்பு

மவுன்ட் மவுங்காநுயி: நியூசிலாந்து ஏ அணியுடனான முதல் டெஸ்டில் (4 நாள் போட்டி), இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 340 ரன் குவித்துள்ளது. பே ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, முரளி விஜய் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தது. விஜய் 28 ரன் எடுத்து பிளேர் டிக்னர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த பிரித்வி ஷா 62 ரன் (88 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து மயாங்க் அகர்வால் - ஹனுமா விஹாரி இணைந்து 3வது விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்தனர். அகர்வால் 65 ரன் (108 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். கேப்டன் அஜிங்க்யா ரகானே 12 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த பார்திவ் பட்டேல் அதிரடியியாக விளையாடி அரை சதம் அடிக்க, இந்தியா ஏ அணி ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹனுமா விஹாரி 86 ரன் (150 பந்து, 8 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார். இந்தியா ஏ அணி 89.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 340 ரன் குவித்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பார்திவ் பட்டேல் 79 ரன்னுடன் (111 பந்து, 10 பவுண்டரி) களத்தில் உள்ளார். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India , India's run-a-goal , 4 players, half century
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!