×

கஜா புயல் வலுகுறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது : வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன்

சென்னை : கஜா புயல் காலை 11.30 மணியளவில் வலுகுறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார். இன்று மதியம் முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என அவர் கூறியுள்ளார். மேலும் தெற்கு வங்கக்கடலின் மத்தியில் நவ., 18ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் நவ., 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Balachandran , Gajah Storm,Atmospheric inferior zone, Balachandran, Director of Meteorological Research
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...