×

சவுதி அரேபிய செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலையில் தொடர்புடைய 5 பேருக்கு மரண தண்டனை: சவுதி அரேபிய அரசு முடிவு

சவுதி அரேபியா: சவுதி அரேபிய செய்தியாளர் மாயமானது குறித்த விவகாரத்தில் விசாரணைக்கு அந்நாட்டு மன்னர் உத்தரவிட்டிருந்தார். வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் சவுதி அரேபிய செய்தியாளராக பணியாற்றி வந்த ஜமால் கசோக்கி, அந்நாட்டு மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்ற அவர் மாயமாகியுள்ளார். இந்நிலையில் கசோக்கியை சவுதி அரேபிய தூதரக அதிகாரிகள் 15 பேர் சேர்ந்து சித்ரவதை செய்து கொன்றதாக துருக்கி அரசு ஆதரவு நாளிதழான யானி சாபக் தெரிவித்திருந்தது. இதனிடையே இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவை டிரம்ப் சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் மைக் பாம்பியா நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் ஜமால் கசோக்கி மாயம் ஆனது தொடர்பான விசாரணைக்கு சவுதி மன்னர் சல்மான் உத்தரவிட்டார்.

தற்போது செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலையில் தொடர்புடைய 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேரிய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அரசின் அதிகாரப் பூர்வ செய்தி நிறுவனமான SBA விடுத்துள்ள அறிக்கையில் கடந்த அக்டோபர் மாதம் 2-ம் தேதி துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் சென்ற கசோக்கி கழுத்தை நெறித்து கொல்லப்பட்டதாகவும், அவரது உடலை துண்டாக்கி தூதரகத்திற்கு வெளியே இருந்த மற்றொருவரிடம் கொலை கும்பல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. கசோக்கியை கொல்ல உலவுத்துறை துணை தலைவர் அகமது அல் அசிரி உத்தரவிட்டதாகவும், அதில் 21 பேருக்கு தொடர்பு உள்ளதாகவும், கொலையில் ஈடுப்பட்ட 5 பேருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கசோக்கி கொலையை அடுத்து சர்வதேச நாடுகள் கொடுத்த நெறுக்கடியால் இப்போது கொலையை ஒப்புக்கொண்டுள்ள சவுதி அரேபியா அரசு கொலையாளிகளை அடையாளமும் காட்டியுள்ளது. ஆனால் கொலையில் பட்டத்து இளவரசர் முகமதுக்கு தொடர்பு இல்லை என்றும் அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saudi Arabian ,Jamal Kusoki ,government ,deaths , Saudi Arabian,5 deaths,Saudi Arabian journalist, Jamal Kusoki
× RELATED சவூதி அரேபிய சிறையில் இருந்து...