×

கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல் : நாகை, வேதாரண்யம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கடும் சேதம்

நாகை: கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கஜா புயல் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது. புயல் காரணமாக நேற்று இரவு 110 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது இரவில் இருந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கஜா புயல் கரையை கடந்த நிலையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்தன..

alignment=


காரைக்காலில் அதிக மழையு மற்றும் காற்றின் காரணமாக மரங்கள் கடும் சேதமடைந்துள்ளன. இதேபோல் நிருநள்ளாறு, நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மின்கம்பங்களும் கீழே விழுந்துள்ளன. இதன் காரணமாக காரைக்காலில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதபோல் நாகை, வேதாரண்யம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளிலும், ஆயிரக்கணக்கான மரங்கள் ஆங்காங்கே விழுந்து சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து ஸதம்பித்துள்ளது. மின்கம்பங்களும் விழுந்துள்ளதால் மின் இணைப்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் மின் வினியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் என கூறப்பட்டுள்ளது.

ரயில் வேவையில் பாதிப்பு

alignment=


கஜா புயல் காரணமாக நாகப்பட்டினத்தில் உள்ள ரயில் நிலையம் உருக்குளைந்து காணப்படுகிறது. ரயில் நிலையத்தில் உள்ள 4 நடைமேடைகளிலும் மேற்கூரைகள் சூறைக்காற்றில் சின்னாபின்னமாகியுள்ளன. ரயில் நிலைய அலுவலகம், பயணிகள் காத்திருப்பு மையங்களில் ஜன்னல் கண்ணாடிகள், கதவுகள் அனைத்தும் உடைந்து கிடக்கின்றன. தண்டவாளத்தில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. உயர்மின்னழுத்த கம்பிகளும் அறுந்து கிடப்பதால் நாகை ரயில் நிலையம் உடனடியாக மூடப்பட்டது. நாகை ரயில் நிலையத்தை சீரமைத்து மீண்டும் திறக்கப்பட 2 அல்லது 3 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலால் பேருந்து சேவை தடைபட்ட நிலையில் ரயிலில் செல்லலாம் என்ற எதிர்பார்ப்போடு இருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

போக்குவரத்து ஸ்தம்பித்தது..

அனைத்து சாலைகளிலும் ஆங்காங்கே மரங்கள் மற்றம் மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. மரங்கள் மற்றும் மின்கம்பங்களை அகற்றி சாலைகளை சீரமைத்த பின்னரே போக்குவரத்து சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைத் தொடர்பு துண்டிப்பு

கஜா புயலால் நாகை மாவட்டம் வேதாரணயம், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. செல்போன் டவர்கள் சாய்ந்ததால் தொலைபேசி சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வேதாரண்யத்தில் 2 செல்போன் டவர்களை நடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே, தகவல் தொடர்பில் சற்று முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து நிறுவன தொலைபேசி சேவையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதால், ஆம்புலன்ஸை அழைக்க முடியாதவர்கள் உதவி எண் 100ஐ அழைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Adiyar Kaja ,Vedaranyam ,Karaikal ,Nagapattinam , Gajah Storm, Nagai, Vedaranyam, Karaikal, Damage
× RELATED கோடை மழை 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு