×

கொளத்தூர் டாக்டர் கொலை வழக்கு.... சகோதரருக்கு ஆயுள்

சென்னை: கொளத்தூர் டாக்டர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெரியப்பா மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் ராஜேஷ்குமார். இவரது பெரியப்பா மகன் மகேந்திரன். அண்ணாநகரில் மெடிக்கல் நடத்தி வந்தார். ராஜேஷ்குமார் மருத்துவர் என்பதால் அவரது குடும்பம் நல்ல வசதியாக இருந்துள்ளது. ஆனால், இது மெடிக்கல் நடத்தி வந்த மகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இந்தநிலையில், ராஜேஷ்குமாருக்கு வசதியான டாக்டருக்கு படித்த பெண்ணை திருமணம் செய்ய அவரது பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், திருமணம் நடந்தால் ராஜேஷ்குமார் குடும்பத்தினர் பெரிய பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள் என்று நினைத்து, மகேந்திரன் ராஜேஷ்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

அதன்படி, கடந்த 28.6.2017 அன்று கிளினிக் சென்று விட்டு ராஜேஷ்குமார் வீட்டுக்கு திரும்பினார். அப்போது அங்கு சென்ற மகேந்திரன், ராஜேஷ்குமாரின் திருமணத்துக்கு பார்ட்டி கேட்பது போல் நாடகமாடியுள்ளார். பின்னர், இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது மகேந்திரன், ராஜேஷ்குமாரை கீழே தள்ளி செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு உடலை அருகில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை செஷன்சு நீதிமன்றத்தில் நீதிபதி சுபாதேவி, முன்பு நடந்து வந்தது. வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட மகேந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து  உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kolathur Doctor ,Brother , Kolathur Doctor murder case,Brother's life
× RELATED அடிச்சாலும், புடிச்சாலும் நீயும்,...