×

செய்யாறு அருகே பையூர் நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழாவில் மாணவர்களுக்கு ரோஜா செடி விநியோகம்

திருவண்ணாமலை: பையூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்த குழந்தைகள் தினவிழாவில் மாணவர்களுக்கு ரோஜா செடிகள் வழங்கப்பட்டது. செய்யாறு தாலுகா அனக்காவூர் ஒன்றியம் பையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி தலைமை தாங்கி பள்ளி, வீடு, வீதிகளில் மரம் செடிகளை வளர்த்தல், பாரம்பரிய உணவு வகைகளை உண்ணுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்தல், நூலகங்கள் சென்று புத்தகங்கள் படித்தல் குறித்து பேசினார்.

விழாவில் ஆசிரியர்கள் சிவாஜி கணேசன், அருள்ஜோதி, காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவல்புட்டு, கருபட்டி காபி, பச்சைப்பயறு சுண்டல், பட்டாணி, வறுகடலை, பொரி போன்ற பாரம்பரிய உணவுடன், ரோஜா செடிகள் வழங்கப்பட்டது.
வேட்டவலம்: கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி அரசு உயர்நிலைபள்ளியில் குழந்தைகள் தினவிழா பள்ளி வளாக அரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை அனுசுயா தலைமை தாங்கினார். விழாவில் இயற்கை மருத்துவர் சாமி கலந்து கொண்டு இயற்கை முறை உணவுகள், மருந்தில்லா மருத்துவம் குறித்து பேசினார்.

முடிவில் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை: திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்னாள் பாரத பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ஒய். ஜெயராஜ் சாமுவேல் தலைைம தாங்கினார். ஆசிரியர் சங்க செயலாளர் எஸ்.தயாளன் வரவேற்றார். விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.அருணகிரி கலந்து கொண்டு குழந்தைகள் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

செங்கம்: செங்கம் அடுத்த குருமபட்டி கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நேற்று குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சடையன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சிவராமன் வரவேற்றார். விழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சடையன் பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Children's Day Celebration ,Pyorr Middle School ,Chellur , Ceyyaru, children, rose plant
× RELATED அதிமுகவை நம்புனா கரை சேர்ப்போம்...