×

இந்திய- இஸ்ரேல் நாடுகளின் கூட்டு முயற்சியால் ஓசூர் அருகே விவசாயிகளுக்கு கொய்மலர்கள் சாகுபடி பயிற்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இந்திய- இஸ்ரேல் நாடுகளின் கூட்டு முயற்சி காரணமாக நவீன தொழில்நுட்பத்தில் விவசாயிகளுக்கு கொய்மலர்கள் சாகுபடி பயிற்சி அளிக்கப்படுகிறது. குறைந்த செலவில் அதிக உற்பத்தி கிடைப்பதால் கொய் மலர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொய்மலர்கள் சாகுபடியை விவசாயிகள் அதிக அளவில் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ரோஜா, கார்னேஷன், ஜெர்பரா, போன்ற மலர்கள் 1,140 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் ரோஜாமலர்கள் உலக தரம் வாய்ந்தவை என்பதால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு இந்தியா முழுமைக்கும், பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.இதனிடையே தரமான கொய்மலர்களை உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், ஒசூர் அருகே தளியில் இந்திய இஸ்ரேல் நாடுகளின் கூட்டில் இயங்கி வரும் கொய்மலர் மகத்துவ மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு மலர் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தேசிய தோட்டக்கலை திட்ட இயக்கத்தின் மூலம் கொய்மலர்கள் சாகுபடி செய்யும் நவீன தொழில்முறைகள் குறித்து மட்டுமல்லாது உர நிர்வாகம், நீர் மேலாண்மை, சந்தை வாய்ப்பு குறித்தும் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெற வரும் விவசாயிகள் இங்கு தங்கி, மலர் சாகுபடி குறித்த தெளிவான விளக்கங்களை நேரடி பயிற்சிகள் மூலம் அறிந்து கொள்கின்றனர்.

இந்திய இஸ்ரேல் கூட்டு திட்ட தொழில்நுட்பங்களின் மூலம் பயிர் பாதுகாப்பு மேலாண்மை, உர நிர்வாகம், நீர் மேலாண்மையில் புதிய நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி சிக்கனமாக நீரையும் உரங்களையும் பயன்படுத்தி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நவீன பயிற்சிகளின் மூலம் மலர்கள் சாகுபடியில் உற்பத்தி அதிகரித்து விவசாயிகளுக்கு நல்ல இலாபமும் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மையத்தின் மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு கொய்மலர்கள் சாகுபடி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் விவசாயிகள் இங்கு ஆர்வத்துடன் வந்து பயிற்சி பெற்று செல்கின்றனர். இது தவிர தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் இரண்டு ஆண்டுகள் தோட்டக்கலை பட்டயப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது விவசாயத்தில் சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இது அமைந்துள்ளதாகவும், அடுத்த தலைமுறையினர் விவசாயத்தை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள இது உதவும் என சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore ,Hosur ,countries ,Israeli ,Indo , Coimbatore,cultivation,training ,farmers n,Indo-Israeli countries
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...