×

தற்போதைய சூழலில் சீனாவோடு போர் தொடுத்தால் அமெரிக்கா தோற்றுப்போக நேரிடும்: டிரம்ப் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை

அமெரிக்கா: தற்போதைய சூழலில் சீனாவோடு போர் தொடுத்தால் அமெரிக்கா தோற்றுப்போக நேரிடும் என அமெரிக்க நாடாளுமன்ற பாதுகாப்பு ஆய்வு ஆணையம், டிரம்ப் நிர்வாகத்தை எச்சரித்திருக்கிறது. அமெரிக்க முப்படைகளின் பலம் குறித்து ஆய்வு செய்ய ஆணையம் ஒன்றை அமெரிக்க நாடாளுமன்றம் நியமனம் செய்தது. இந்த ஆணையம் அமெரிக்க பாதுகாப்பு படைகளின் போர் யுக்தி, அவற்றின் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

இதன் முடிவில், அமெரிக்க முப்படைகளின் போர் திறனை அதிகரிக்க அவசர அவசியமான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தேவை என கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், சீனாவுடனோ அல்லது ரஷ்யாவுடனோ போரிடுமானால் அமெரிக்கா வெற்றிபெற பகீரதபிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும் என்றும், அல்லது தோல்வியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமெரிக்க ஆணையம் எச்சரித்துள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : US ,China , US,defeated ,fights ,China ,drum management
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...