×

ரோஹிங்கியா மக்கள் மீது மியான்மர் ராணுவத்தின் கருணையற்ற தாக்குதலுக்கு அமெரிக்க துணை அதிபர் கண்டனம்

சிங்கப்பூர்: மியான்மர் நாட்டில் வாழ்ந்து வரும் பல சிறுபான்மை இனங்களுள் ரோஹிங்கியா மக்களும் அடங்குவர். மியான்மர் நாட்டின் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையில் ரோஹிங்கியா மக்கள்தான் பெரும்பான்மையாக இடம்பிடித்துள்ளனர். அந்நாட்டின் ரக்கைன் மாநிலத்தின் வட பகுதியில் அதிகளவில் இவர்கள் வாழ்த்து வருகின்றனர். ஆனாலும், இவர்கள் வங்கதேசத்திலிருந்து அத்துமீறிக் குடியேறியவர்கள் என அரசால் முத்திரை குத்தப்பட்டு குடியுரிமை மறுக்கப்பட்டவர்கள். உலகிலேயே அதிகத் துன்பத்துக்கு ஆளாகும் சிறுபான்மை இனமாக இருந்து வருகின்றனர். 1982-ம் ஆண்டு முதல் மியான்மர் அரசாங்கத்தால் இவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டு வருகிறது.

மியான்மர் ராணுவத்தினர் ரோஹிங்கிய மக்கள் மீது நடத்திய தாக்குதலில் 730 குழந்தைகள் உட்பட 6,700 ரோஹிங்கியா மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அக்காலகட்டத்தில் எந்தவொரு பத்திரிகைகளையும் அவர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கவில்லை. ஐ.நா.,வின் உண்மைக் கண்டறியும் குழுவையும் அவர்கள் அனுமதிக்கவில்லை.

நூற்றுக்கணக்கான வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா மனித உரிமை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக வன்முறை நிகழ்த்திய மியான்மர் மீது கடுமையானக் கண்டனங்களை வைத்துள்ளது. கடந்த 12 மாதங்களில் ரோஹிங்கிய மக்கள் மீது ராணுவம் கட்டவிழ்த்து விட்ட வன்முறையில் கிட்டத்தட்ட 7 லட்சம் ரோஹிங்கிய மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியிருப்பதாகச் ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரின் உயரதிகாரிகள் விசாரணைக்குட்பட வேண்டும் என்று ஐ.நா. வெளியிட்ட அறிக்கையை மியான்மர் அரசாங்கம் மறுத்தது.

இந்நிலையில் ரோஹிங்கியா இஸ்லாமியர்களை மியான்மர் ராணுவம் கருணையின்றி கையாள்வதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். சிங்கப்பூரில் நடைபெறும் ஆசியன் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள மைக் பென்ஸ், மியான்மர் தலைவர் ஆங் சாங் சூகியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மியான்மர் ராணுவத்தின் மோசமான மற்றும் கருணையற்ற துன்புறுத்தல்களால், 7 லட்சம் ரோகிங்கியா இஸ்லாமியர்களை வங்கதேசத்திற்கு விரட்டியடித்துள்ளதாக ஆங் சாங் சூகியிடம் மைக் பென்ஸ் கூறியுள்ளார். அமெரிக்க பத்திரிக்கையாளர்கள் 2 பேர் மியான்மர் சிறையில் அடைத்திருப்பது பல லட்சம் அமெரிக்கர்களை வேதனையில் ஆழ்த்தியிருப்பதாக கூறிய மைக் பென்ஸ், அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் சூகியிடம் வலியுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : US ,Vice Chancellor ,attacks ,Rohingya ,Myanmar army , Myanmar, Rohingya, US Vice President, condemned
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்