×

இங்கிலாந்து 285 ஆல் அவுட்..... ஜாஸ் பட்லர் 63, சாம் கரன் 64

கண்டி: இலங்கை அணியுடனான 2வது டெஸ்டில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 285 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பல்லெகெலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணி 75.4 ஓவரில் 285 ரன் குவித்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. சாம் கரன் அதிகபட்சமாக 64 ரன் (119 பந்து, 1 பவுண்டரி, 6 சிக்சர்), ஜாஸ் பட்லர் 63 ரன் (67 பந்து, 7 பவுண்டரி), ஜோ பர்ன்ஸ் 43 ரன், அடில் ரஷித் 31 ரன் விளாசினர். பென் ஸ்டோக்ஸ், போக்ஸ் தலா 19 ரன் எடுக்க, கேப்டன் ரூட் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இலங்கை பந்துவீச்சில் தில்ருவன் பெரேரா 4, புஷ்பகுமாரா 3, அகிலா தனஞ்ஜெயா 2, லக்மல் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 26 ரன் எடுத்துள்ளது. கவுஷல் சில்வா 6 ரன் எடுத்து லீச் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். கருணரத்னே 19, புஷ்பகுமாரா 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : England ,Butler 63 ,Sam Karan 64 , England, Joss Butler, Sam curan,
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது