காஷ்மீரில் பதுங்கியிருந்த 2 ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் கைது

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அவந்திபோரா பகுதியில் உள்ள பன்ஸ்கம் சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த தீவிரவாதிகள் இருவரையும் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். சோதனையின்போது அவர்களிடம் இருந்து கையெறி குண்டுகள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் முகமது ஷேக் மற்றும் நசிர் உல் இஸ்லாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: