×

மாணவர் குழுக்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் திட்டம்: மாநகராட்சி பள்ளிகளில் விரைவில் அறிமுகம்

சென்னை: மாணவர்களின் ஊட்டச் சத்து குறைபாட்டை மாணவர் குழுக்கள் மூலம் கண்டறியும் திட்டம் விரைவில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படுத்தபட உள்ளது. அனிமீயா குறைபாடு மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை  பாதுகாக்க போசன் அபியான் என்ற திட்டத்தை கடந்த மார்ச் மாதம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியது. இந்த திட்டமானது சென்னையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், கல்வித்துறை, சுகாராத் துறை, காவல் துறை, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட 13 துறைகளுடன் இணைந்து செயல்படுத்தபட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் 13 துறை அதிகாரிகள் அடங்கிய மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு உள்ள ஊட்டச் சத்து குறைபாட்டை கண்டறிய மாணவர் குழுக்களை அமைக்க   அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் 280 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இதைத் தவிர்த்து அரசுப் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்றால் பெரிய ஆய்வு ஒன்றை நடத்த வேண்டும்.

இதற்காக பல மாதங்கள் ஆகலாம். எனவேதான் மாணவர்களிடம் உள்ள ஊட்டச் சத்து குறைப்பாட்டை மாணவர்களை வைத்தே கண்டறியும் முறையானது பள்ளிகளில் செயல்படுத்தபட உள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் 4 முதல் 8 மாணவர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். ஆசிரியர்கள் இந்த குழுவில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.  இதனைத் ெதாடர்ந்து அந்த மாணவர்களின் பள்ளிகளில் உள்ள சக மாணவர்களிடம் பேசி அவர்களுக்கு எந்த மாதிரியான ஊட்டச் சத்து குறைபாடு உள்ளது என்பதை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள். மாணவர்களின் அளிக்கும் தகவல்களை பொறுத்து ஆசிரியர்கள் அது எந்த மாதிரியான பிரச்னை எண்பதை கண்டறிந்து அதிகாரிகளுக்கு   அறிக்கை அளிப்பார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Student Groups: Introduction to Municipal Schools , student, Nutrient deficiency, Municipal Schools
× RELATED மாணவர் குழுக்கள் மூலம் ஊட்டச்சத்து...