×

லாரி ஷெட் எரிந்து நாசம்

பெரம்பூர்: காசிமேடு, எஸ்.என்.செட்டி தெருவை சேர்ந்தவர் முருகன் (45). லாரி பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இங்கு 6 பேர் வேலை செய்து வருகின்றனர். நேற்று மதியம் திடீரென இந்த கடை தீப்பிடித்து எரிந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே தண்ணீர் ஊற்றி, தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. தகவலறிந்து ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

புகாரின்பேரில், காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது பழுது பார்க்கும் இடத்தில் பழைய உதிரி பாகங்கள் இருந்த இடத்தில் தீப்பிடித்தது தெரிந்தது. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. மின்கசிவால், இந்த தீ விபத்து நடந்ததா? அல்லது சமூக விரோதிகளின் செயலா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Larry Sheet , Lorry Shed, burned down,
× RELATED லாரி ஷெட் எரிந்து நாசம்