×

காங்கிரசிலிருந்து சிரஞ்சீவி விலகல்?

ஐதராபாத்: அடுத்த ஆண்டு (2019) மக்களவை தேர்தல் மற்றும் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இதன் முதல் முயற்சியாக சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாடு சந்தித்து பேசினார். இந்த கூட்டணி முடிவுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான சிரரஞ்சீவி அதிருப்தி தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்வது என்பது சரியான முடிவு அல்ல.

இதை ஏற்க முடியாது. இந்த முடிவில் காங்கிரஸ் தலைமை உறுதியாக இருந்தால், கட்சியில் இருந்து விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சிரஞ்சீவி தெரிவித்தாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. இது பற்றிய அறிவிப்பு எதுவும் சிரஞ்சீவி தரப்பில் இருந்து வெளியாகவில்லை. காங்கிரஸ் கட்சியில் இருந்து சிரஞ்சீவி விலகினால், எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமா, பாதகமா என்பது தேர்தலின் போதுதான் தெரியவரும் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chiranjeevi ,Congress , Chiranjeevi, Congress
× RELATED திருத்தணி அருகே வாகன சோதனையின்போது ரூ.25.90 லட்சம் பறிமுதல்..!!