நண்பர்களே! மோடி சொன்ன ‘நல்ல நாள்’ வராது சொல்வது வேறுயாரும் அல்ல அவரை மாதிரியே தோற்றத்தில் இருக்கும் அப்கிநந்தன் பதக் தான்

உ.பி.யில் பா.ஜ. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய குடியரசு கட்சி (அதாவாலே)வின் மாநில துணைத் தலைவர் அப்கிநந்தன் பதக். இவர் தோற்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மாதிரியே இருப்பார். இதை பயன்படுத்தி அவர் மாதிரியே உடை உடுத்தியும் அவரை மாதிரியே பேசியும் வாக்காளர்களை கவர்ந்தார் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கடந்த மாதம் நடிகரும் அரசியல்வாதியுமான ராஜ் பப்பர் முன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் பதக்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பஸ்தார் மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பதக் பிரசாரம் செய்தார். அப்போது, “நண்பர்களே, மோடி சொன்ன நல்ல நாள் வராது. அவர் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் கரைந்துவிட்டது. இனியும் ஏமாற வேண்டாம். தயவு செய்து உங்கள் வாக்குகளை காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு போடுங்கள்.” என்று மனம் உருகி வேண்டுகோள் விடுத்து பிரசாரம் செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>