குழந்தைகள் தின சிறப்பு கூகுள் டூடுளாக தேர்வு செய்யப்பட்டுள்ள மும்பை மாணவியின் ஓவியம்!

மும்பை: மும்பையை ரே்ந்த பள்ளி மாணவி தீட்டிய ஓவியத்தை கொண்டு கூகுள் தேடுப்பொறி தனது டூடுள் பக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளை நினைவு கூறும் வகையில் இன்றைய தினம் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்நாளை சிறப்பிக்கும் விதமாக கூகுள் சிறப்பு டூடுளை உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் உள்ள படிக்கும் பள்ளி மாணவர்களின் சிந்தனைமற்றும் படைப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சமீபத்தில் ’டூடுள்ஃபார் கூகுள்’  என்ற போட்டியை நடத்தியது. இந்த போட்டிக்கான கருவாக என்னை ஊக்குவிப்பது எது? என்ற தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 75,000க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்றனர். அவர்களில் மும்பையை சேர்ந்த பிங்ளா ராகுல் என்ற மாணவி தீட்டிய ஓவியம் டூடுளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விண்வெளியை தொலைநோக்கு கருவி வாயிலாக பார்க்கும் ஒரு சிறுமியையும் GOOGLE என்ற வார்த்தையில் உள்ள ஒவ்வோர் எழுத்தும் விண்வெளி சார்ந்ததாக இருக்கும்படியும் இந்த சிறமி ஓவியத்தை தீட்டியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய பிங்ளா ராகுல், மிகப்பெரிய பிரபஞ்சத்தில் இருந்து பார்க்கும்போது மனிதர்களும், அவர்களது பிரச்சனைகளும் எத்தனை சின்னஞ்சிறியது என்பது தெளிவாக தெரியும் என்றும், இதை அனைவரும உணர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த ஓவியத்தை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: