×

மேற்கு, தென்மேற்கு திசையில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் கஜா புயல் நகர்கிறது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: மேற்கு, தென்மேற்கு திசையில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் கஜா புயல் நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னைக்கு கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு 620 கி.மீ. தொலைவிலும் கஜா புயல் உள்ளது என அறிவித்துள்ளது. கஜா புயல் பாம்பன் மற்றும் கடலூர் இடையே நாளை மாலை கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 11.30 மணி அளவில் தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ghazz ,Meteorological Center , 7 km west,southwest direction,Ghazz storm ,Meteorological Center
× RELATED கனமழை பெய்ய வாய்ப்பு