×

கஜா புயல் எச்சரிக்கை : நாகையை சேர்ந்த மீனவர்கள் 40 பேர் ஆந்திராவில் தஞ்சம்

நாகை: வங்க கடலில் ஏற்பட்டுள்ள உருவாகியுள்ள கஜா புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே நாளை( 15ம் தேதி) பிற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் நாகை துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு கடந்த 3 நாட்களாக ஏற்றப் பட்டுள்ளது. இதனால்  நாகை மாவட்டத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை. மீன் பிடிக்க சென்ற மீனவர்களை உடன் கரை திரும்புமாறு நேற்று முன்தினம் முதல் நடுகடலில் மீன் பிடித்துக் கொண்டு இருக்கும் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கடலோர காவல் படையினர் நடு கடல் பகுதிக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டு இருக்கும் மீனவர்கள் அருகே சென்று ஒலி பெருக்கி மூலம் புயல் சின்னம் உருவாகியுள்ளதையும், உடன் கரைக்கு திரும்பிடுமாறு கேட்டுக் கொண்டனர். புயல் சின்னம் காரணமாக நாகை, காரைக்கால் மாவட்டத்தில் 2 ஆயிரம் விசைப்படகுகளும், 5 ஆயிரம் பைபர் படகுகளும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை. இதனால் சுமார் ஒரு லட்சம் மீனவர்கள் வேலை இழந்துள்ளனர்.
மேலும் நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 40 பேர் கடந்த சில நாட்களுக்கு முன் 4 விசைப் படகுகளில் மீன் பிடிக்க ஆந்திர பகுதிக்கு சென்றனர்.

அவர்களுக்கு புயல் பற்றிய அறிவிப்பு கொடுக்கப்பட்டதால் வேறு வழியின்றி அவர்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றனர். ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள அந்த பகுதிக்கு மீனவர்களை அழைத்த ராணுவத்தினர் அவர்களை புயல்  எச்சரிக்கை நீங்கும் வரை தங்க வைத்துள்ளதாகவும், அவர்கள் அங்கு பத்திரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் நாகை மாவட்டத்தில் உள்ள மீன் இறங்கு தளங்களில் படகுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  படகுகள் மீன் பிடிக்க செல்லாததால்  மீன் இறங்கு தளம் வெறிச்சோடி காணப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ghazi ,fishermen ,Nagam ,refuge ,Andhra , Kaja storm, Nagapattinam, fishermen
× RELATED இலங்கை சிறையிலிருந்து...