×

புதுக்கோட்டை அருகே 120 சவரன் நகை கொள்ளை... வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து 120 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டின் உரிமையாளர் நூர்தீன் குடும்பத்துடன் வெளியூர் சென்ற நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த நூர்தீன் திருச்சி சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டை கொள்ளை நடந்தது தெரியவந்தது. வீட்டில் இருந்த 120 சவரன் நகை,ரூ.30 ஆயிரம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் நூர்தீன் அப்பகுதியில் ஒலி, ஒளி அமைப்பகம் நடத்தி வருகிறார். கொள்ளை குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் நேரில் ஆய்வு செய்தார்.  கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை பதிவு செய்தனர். கொள்ளை குறித்து  கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : jewel robbers ,Pudukottai ,house , Awareness, 120 shaving jewelry robbery, mystery persons, handwriting
× RELATED கோயம்பேட்டில் பரபரப்பு வீடு புகுந்து...