×

ஐசிசி தரவரிசை கோஹ்லி, பூம்ரா தொடர்ந்து முதலிடம்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா இருவரும் நம்பர்1 அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பேட்டிங் தரவரிசையில் கோஹ்லி 899 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ரோகித் (871), ராஸ் டெய்லர் (808), ஜோ ரூட் (807), பாபர் ஆஸம் (802) அடுத்த இடங்களில் உள்ளனர். பந்துவீச்சு தரவரிசையில் பூம்ரா (841), ரஷித் கான் (788), குல்தீப் யாதவ் (723), காகிசோ ரபாடா (702), சாஹல் (683) ஆகியோர் டாப் 5 இடங்களில் உள்ளனர். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் நம்பர் 1 ஆல் ரவுண்டராக உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ICC ,Kohli ,Bumra , ICC ranking,Kohli , Bumra continue ,series
× RELATED ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே...