×

பொய் செய்திகளை களையெடுக்க 20 குழுக்கள் தேர்வு: வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: இந்தியா உள்பட உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப்பில் பரவும் பொய் செய்திகளை களையெடுக்க, 20 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம், பொய் செய்திகள் எவ்வாறு பரவுகின்றன, அதை தடுக்க அடுத்தடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இந்த குழு ஆய்வு நடத்தும் என்றும், 20 குழுக்களில், இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களும் இடம்பெற்றிருப்பதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப்பில் பரவும் வதந்திகளால் ஏற்படும் பிரச்சனைகளை களைவதற்காக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதேபோல், பல்வேறு நாடுகளும் அறிவுறுத்தியதை அடுத்து, பொய் செய்திகளை களைய 20 குழுக்களை வாட்ஸ் ஆப் நிறுவனம் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : groups ,company announcement , False news, 20 groups, whats of company
× RELATED 127 ஆண்டுகளுக்குப் பிறகு கோத்ரேஜ் குழுமம் இரண்டாகப் பிரிந்தது