×

கஜா புயல் 15ம் தேதி வலுவிழந்து கரையை கடக்கும் : தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னை : கஜா புயல் வலுவிழந்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் தகவல் அளித்துள்ளார். இந்த புயலானது வரும் 15ம் தேதி பிற்பகல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும், கரையை கடக்கும்போது புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், வேதாரண்யம் போன்ற பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார். புயல் கரையை கடக்கும் போது வலுவிழக்கும் என்றும், அப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் சென்னையை பொறுத்தவரை 14ம் தேதி இரவு முதல் 15ம் தேதி காலை வரை நல்ல மழை பெய்யும் என்றும், ஆனால் பாதிப்பு இருக்காது என்றும் கூறியுள்ளார். கஜா புயல் வங்க கடலில் இருந்து இடம்பெயர்ந்து அரபிக்கடல் பகுதிக்கு செல்வதால் 16 மற்றும் 17ம் தேதிகளில் மழை பெய்யும் என்றும், இதனை தொடர்ந்து 19 மற்றும் 20ம் தேதிகளில் மீண்டும் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Kajan ,shore ,Tamil Nadu Weatherman , kaja Storm, Tamil Nadu Weatherman, Heavy Rain
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...