×

நவம்பர் 14ம் தேதி இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் : இயக்குனர் பாலச்சந்திரன்

சென்னை : நவம்பர் 14ம் தேதி இரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாகையில் இருந்து 790 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயலால் கடலூர், நாகை,காரைக்கால், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 90 கிமீ வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.மேலும் வரும் 15ம் தேதி பிற்பகலில் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே புயல் கரையை கடக்கும் என்றும் சென்னைக்கு நேரடியான பாதிப்பு இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : season ,Balachandran ,districts , The rainy season will be raining from November 14 to the coastal districts: Director Balachandran
× RELATED 2 மாதமாக வெறிச்சோடிய திற்பரப்பு அருவி:...