×

ரோஜா பூங்காவில் மலர்கள் உதிர்ந்தன : ஏப்ரல் மாதமே இனி பூக்கும்

ஊட்டி:  ஊட்டி ரோஜா பூங்காவில் பெரும்பாலான செடிகளில் மலர்கள் உதிர்ந்த நிலையில் அனைத்து செடிகளிலும் இனி முதல் சீசனான ஏப்ரல் மாதமே பூக்கள் பூத்துக் குலுங்கும். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம், பைக்காரா அணை மற்றும் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர். ஊட்டி விஜயநகரம் பகுதியில் உள்ள ரோஜா பூங்காவில் உள்ள பல ஆயிரம் மலர் செடிகளில் பல வண்ணங்களில் பூத்து குலுங்கும் ரோஜா மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.

பொதுவாக செப்டம்பர், அக்டோபர் மாதத்துடன் இரண்டாம் சீசன்(செப்டம்பர், அக்டோபர்)முடிந்தவுடன், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கும் முதல் சீசனுக்கு பூங்காவை தயார் செய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இம்முறை தென்மேற்கு பருவமழை குறித்த சமயத்தில் துவங்கி நான்கு மாதங்கள் பெய்த நிலையில், கடந்த மாதம் வரை ரோஜா பூங்காவில் உள்ள செடிகளில் அதிகளவு மலர்கள் காணப்பட்டன. இரண்டாம் சீசன் முடிந்த நிலையில் தற்போது பனி பொழிவு காணப்படுவதால், பெரும்பாலான செடிகளில்கள் மலர்கள் கருகி உதிர்ந்துவிட்டன.

இதனால், பூங்காவில் உள்ள பெரும்பாலான செடிகளில் மலர்கள் இன்றி, செடிகள் மட்டுமே காணப்படுகிறது. ஆங்காங்ேக ஒரு சில செடிகளில் மட்டுமே மலர்கள் காணப்படுகிறது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். மேலும், ஊட்டியில் தற்போது உறைபனி விழத்துவங்கியுள்ளதால், அனைத்து செடிகளிலும் மலர்கள் உதிரவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, முதல் சீசனுக்காக பூங்காவை தயார் செய்யும் பணிகளை ஊழியர்கள் துவக்கியுள்ளதால், இனி ஏப்ரல் மாதமே ரோஜா பூங்காவில் உள்ள அனைத்து செடிகளிலும் மலர்களை காண முடியும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rose garden , Rose garden, flowers, April
× RELATED ஊட்டியில் மலர் நாற்று உற்பத்தி தீவிரம்