மழைநீர் வடியாததால் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிப்பு

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பசுமைமாறாக் காட்டுப்பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாயலத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெளிமான், புள்ளிமான், முயல், காட்டுப்பன்றி, நரி, குதிரை, குரங்கு போன்ற ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

இந்த வனவிலங்குகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் நாகை மாவட்ட வனஉயிரின காப்பாளர் நாகசதீஸ்கிடிசாலா உத்தரவின் பேரில் கடந்த 5ம் தேதி முதல் மழை நீர் அதிகமாக தேங்கி உள்ளதால் 12ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சரணாலயத்தில் தண்ணீர் வடியாத காரணத்தால் மீண்டும் நேற்று முதல் 18ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கோடியக்கரை வனச்சரக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: