×

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சூட்கேஸ் நிறைய மனுக்களோடு வந்து பரபரப்பை ஏற்படுத்திய விவசாயி

நெல்லை: அடிப்படை வசதிகளை செய்து தராத அரசுத் துறைகளை கண்டித்து ‘சூட்கேஸ்’ நிறைய மனுக்களோடு, நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் அருகே குலசேகரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (42). விவசாயி. இவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு ‘சூட்கேஸ்’ நிறைய மனுக்களோடு வந்தார். போலீசார் அவரை வழிமறித்து சூட்கேசை வெளியே வைத்து விட்டு செல்லுமாறு வலியுறுத்தினர். இதையடுத்து அவர் சூட்கேசை மட்டும் அங்கு வைத்து விட்டு மனுக்களின் நகல்களோடு சென்றார்.

அவர் மனுவில் கூறியிருப்பதாவது: குலசேகரப்பட்டி கிராமத்தில் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி மற்றும் கழிவு நீரோடை உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. இதுகுறித்து மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், கீழப்பாவூர் பிடிஓ, கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் 4 ஆண்டுகளாக மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. நான் அளித்த மனுக்களின் எண்ணிக்கை நூறை தாண்டி விட்டது. எனவே அந்த மனுக்களின் நகல்களை சூட்கேஸில் அடைத்து கலெக்டரின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Succeses ,office ,Nellie Collector , nellai, collector, suitcase
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...