×

செங்கோட்டை அருகே தோப்பில் புகுந்து யானைகள் அட்டகாசம்

செங்கோட்டை: செங்கோட்டை அருகே தோப்புக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் சுமார் 20க்கும் மேற்பட்ட தென்னைகள் நாசமாயின. நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ளது மேக்கரை. இப்பகுதியில் கடந்த சில தினங்களாக யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. நேற்று முன்தினம் இரவு 5க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வடகரை பகுதியை சேர்ந்த விவசாயி ஜாகிர் உசேன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் புகுந்தன.

பின்னர் 20க்கும் மேற்பட்ட தென்னை மற்றும் பனை மரங்களை வேருடன் பிடுங்கி சாய்த்தன. இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்குள் செல்லமுடியாமல் பீதியில் உறைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடகரை பகுதியில் உள்ள தென்னைதோப்புக்குள் புகுந்த யானைகள் சுமார் 30க்கும் மேற்பட்ட தென்னைகளை பிடுங்கி எறிந்தன. இதேபோல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு  10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்களை நாசம் செய்தது குறிப்பிடத்தக்கது. தொடரும் யானைகளின் அட்டகாசத்தால் இப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.  இப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறை குழு அமைத்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : reef ,Red Fort , Red Fort, Elephants, Coconuts
× RELATED அடுத்தது செங்கோட்டையனா? எஸ்.பி...