×

அயர்லாந்தின் ஆழ்கடல் பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குட்டி சுறா மீன்கள்

அயர்லாந்த்: அயர்லாந்தின் ஆழ்கடல் பகுதியில் ஆயிரம் கணக்கான குட்டி சுறா மீன்கள் வலம் வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேற்கு கடற்கரை பகுதியில் 2500 அடி ஆழத்தில் நூற்றுகணக்கான பூனை சுறாக்களும், ஆயிரக்கணக்கான முட்டை ஓடுகளும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. சுறாக்கள் எப்போதும் குட்டிகளை ஈன்றெடுக்கும் தன்மை கொண்டவை. ஆனால் தற்போது ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான குட்டி சுறாக்களும், அருகிலேயே ஏராளமான முட்டை ஓடுகளும் காணப்படுவது கடல் ஆய்வாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

வேறு ஏதேனும் உயிரினம் முட்டையிட்டிருக்கலாம் என்ற போதும் அது பற்றிய எந்த தடையமும் கிடைக்க்வில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதையடுத்து குறிப்பிட்ட பகுதியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த கடல் ஆய்வாளர்கள் குவிந்து உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sea ,Ireland , Thousands ,small shark fish ,deep sea , Ireland
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...