×

கோவை வேளாண் பல்கலைக்கு புதிய துணை வேந்தர் நியமனம்: கவர்னர் உத்தரவு

சென்னை: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு என்.குமார் துணை வேந்தராக நியமிக்கப்படுகிறார். இந்த பதவியில் 3 ஆண்டுகள் வரை இருக்கலாம். என்.குமார் கோயம்புத்தூர்  வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை நிலையில் டீனாக சிறந்து விளங்குபவர். 22 ஆண்டுகள் பேராசிரியராகவும், 8 புத்தகங்களையும் எழுதியுள்ளார். மேலும் 13 பி.எச்.டி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். 18 ஆராய்ச்சிகளை செய்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vice-Chancellor ,Coimbatore Agricultural University ,Governor , Coimbatore Agricultural University, New Vice Chancellor Appointment, Governor
× RELATED கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை....