×

டிசம்பருக்குள் 9 முதல் பிளஸ் 2 வரை அனைத்து பாடங்களும் கணினி மயம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அம்பூர்பேட்டையில் உள்ள இந்து மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர்கபில் ஆகியோர் நூற்றாண்டு விழா வாயிலை திறந்து வைத்து, விழா மலரை வெளியிட்டனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகம் கல்வித்துறையில் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மாணவர்கள் யூ டியூப் வழியில் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனை, செல்போனில் டவுன்லோட் செய்து படிக்கும் வகையில் மாற்றப்படும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் முறை வருகைப்பதிவு செயல்படுத்தப்படும்.

மாணவர்கள் வருகை மற்றும் வீட்டுக்கு செல்லும் நேரங்களை, பயோமெட்ரிக் முறையில் குறுஞ்செய்தியாக பெற்றோருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கொண்டு வரும் புதிய பாடத்திட்டத்தின்படி பிளஸ் 2 முடித்த உடனே மாணவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கும். வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் கொண்டு வரப்படும். 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு, அனைத்து பாடத்திட்டங்களும் கணினி மயமாக்கப்பட்டு, இணையதளம் மூலம் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் நிறைவேற்றப்படும். மேலும் வரும் டிசம்பருக்குள் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு சைக்கிளும், ஜனவரி மாத இறுதிக்குள் பிளஸ்1, பிளஸ் 2வில் உள்ள 11.17 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chengottai , December 2, Plus 2, Computer System, Minister Chengottai
× RELATED காரில் ரூ.2.76 லட்சம் லஞ்ச பணம் பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது