×

ஒகினாவா கடற்பகுதியில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க கடற்படை விமானம் : 2 விமானிகள் பத்திரமாக மீட்பு

டோக்கியோ: அமெரிக்க கடற்படை போர் விமானம் ஒன்று ஜப்பானின் தெற்கு தீவான ஒகினாவா கடலில் விழுந்து நொறுங்கியது. இந்த போர் விமானத்தில் பயணித்த 2 விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒகினாவாவின் தலைநகரான நஹாவின் கிழக்கு-தென்கிழக்காக சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒசாமா கோசாகாய் கூறியுள்ளார். இந்த விபத்து விமான என்ஜின் கோளாறு காரணமாக நிகழ்ந்துள்ளதாகவும், அச்சுறுத்தல் ஏற்படும் நோக்கத்தில் நிகழவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 2 விமானிகள் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அருகில் உள்ள கடலோரப் பகுதிகளில் ஏதேனும் எண்ணெய் படலம், விமான கழிவுகள் உள்ளதா என்பதை கண்டறிய ஜப்பான் கடல்படை விமானம் விரைந்துள்ளதாகவும் கூறினார். ஜப்பான் நாட்டின் மொத்த நிலப்பகுதியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவினை கொண்டுள்ள ஓகினாவா தீவு, சுமார் 47,000 அமெரிக்க ராணுவ நிலையங்களில் சரிபாதி அளவினை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : US Navy ,aircraft crash ,shore ,Okinawa ,pilots , American Naval Air Force, Okinawa, Japan
× RELATED உடற்பயிற்சிக்கான தளம் அமைக்கும் பணி ஆய்வு