×

புனேவில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அவர்களே சுத்தம் செய்யும் நூதன தண்டனை!

மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பொது இடங்களில் எச்சில் உமிழ்வோரை பிடித்து அவர்களையே சுத்தம் செய்ய வைக்கும் நூதன தண்டனையை மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. புனே நகரத்தை தூய்மையாக வைத்திருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் அங்கமாக பொது இடத்தில் எச்சில் துப்பினால் அவர்களே அதனை சுத்தம் செய்துவிட்டுத்தான் அங்கிருந்து செல்ல முடியும் என்ற தண்டனை முறையை அமல்படுத்தியுள்ளது. இதன்படி கடந்த 8 நாட்களில் 156 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.

மேலும் எச்சில் துப்பிய நபர்களுக்கு ரூ.150 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சாலையில் எச்சில் துப்பினால், அவர்களே அதை சுத்தம் செய்துவிட்டு ரூ.150 அபராதம் செலுத்திய பின்னர்தான் அங்கிருந்து செல்ல முடியும். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னர் இந்த தண்டனை தளர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது. புனே மாநகராட்சியின் இந்த நூதன கெடுபிடிக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ones ,Pune ,spaces , Pune,Public places,Saliva spiders,Example
× RELATED ரெண்டு பேருக்கும் கொம்பு ஊதும்...