×

அரசு பேருந்து மோதி உயிரிழந்த கார்பென்டர் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு: போக்குவரத்து துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விழுப்புரத்தில் கடந்த 2014ம் ஆண்டு எஸ்.இ.டிசி, டி.என்.எஸ்.டி.சி அரசு பேருந்துகள் எதிர் எதிரே மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மோகன், செல்வகுமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். பின்னர் மோகன் உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த மோகனின் மனைவி தனலட்சுமி, மகன் சாந்தகுமார், தாய் பார்வதி ஆகியோர் ரூ.40 லட்சம் இழப்பீடு கோரியும். காயமடைந்த செல்வகுமார் 12 லட்சம் இழப்பீடு கோரியும் சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, செல்வகுமார் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வாங்கியதாக தெரிவித்துள்ளனர். எனவே காயமடைந்த செல்வகுமாருக்கு ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் போக்குவரத்துகழகம் வழங்க வேண்டும். இதேபோல் உயிரிழந்த மோகன் தச்சு வேலை செய்து வந்துள்ளார். தினமும் ரூ.800 சம்பாதித்து வந்துள்ளார். எனவே தமிழக போக்குவரத்து கழக இயக்குனர் ரூ.16 லட்சத்து 19 ஆயிரத்து 944 இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : carpenter family , government, bus, carpenter family, compensation, Court order, transport department
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...