×

ஒகேனக்கல் வனப்பகுதியில் மீண்டும் யானைகள் முகாம்: சுற்றுலா பயணிகள் பீதி

பென்னாகரம்: ஒகேனக்கல் வனப்பகுதியில் மீண்டும் யானைகள் முகாமிட்டுள்ளதால், வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் பீதியடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்தையொட்டி, அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி வந்த நிலையில், தற்போது அஞ்செட்டி வனப்பகுதியில் இருந்து ஒகேனக்கல்லை நோக்கி யானை கூட்டம் வந்துள்ளதாக தெரிகிறது. பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் பண்ணப்பட்டி பகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக அந்த யானைகள் சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், அவ்வழியாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள், சாலையோரம் யானைகள் நிற்பதை பார்த்ததும் திரும்பி செல்கின்றனர். ஒருசில சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல், அருகில் சென்று புகைப்படம் எடுக்கின்றனர். இங்கு முகாமிட்டுள்ள யானைகள், உணவுக்காக ஒகேனக்கல் பகுதியில் மரக்கிளைகளை உடைத்து சாப்பிடுகிறது. இரவு நேரங்களில் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள், யானைகள் நடமாட்டம் காரணமாக பீதியால் அச்சத்துடனேயே வருகின்றனர். எனவே, யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Elephant Camp ,Hogenakkal Forest , Hogenakkal Forest, elephants camp, Tourists
× RELATED கோத்தகிரி அருகே ஒற்றை காட்டு யானை முகாம்; விவசாயிகள் கடும் அச்சம்