×

கமல்ஹாசன் பதிலடி மக்கள் தரும் நம்பிக்கையில் மீசையை முறுக்குகிறேன்

ஓசூர்: மக்கள் தரும் நம்பிக்கையில்தான் மீசையை முறுக்குகிறேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்தார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஓசூரில் அவர் பேசும்போது, கமல் மீசையை முறுக்கினால் அரசியலில் தூக்கில் போட்டுவிடுவார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதற்கு பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது: இது பணம் கொடுத்து வரவழைக்கப்பட்ட கூட்டம் இல்லை. அன்பினால் கூடிய கூட்டம். நீங்கள் இருக்கும் நம்பிக்கையில் தான் எனது மீசையை முறுக்குகிறேன். ஆணவத்தால் அல்ல.

இந்த  முறுக்கு, நேர்மையின் முறுக்கு. தமிழக எல்லையான ஓசூரில், குண்டூசி முதல் ஆகாய விமானம் வரை தயாரிக்கப்படுகிறது. ஆனால், உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது. எதுவுமே கிடைக்கவில்லையே. அதனை பெறுவதற்காக ஒன்று திரள்வோம். இங்கு சரியான கட்டமைப்பு வசதி இல்லை. அடிப்படை தேவைகளான சாலை, போக்குவரத்து மற்றும் கல்விக்கூடங்கள் எதுவுமே இல்லை. தற்போது இருக்கும் ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kamal Hassan , Kamal Hassan, mustache
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...